கரோனா அச்சத்தால் பயணிகள் தயக்கம்: 80% ஆம்னி பேருந்துகள் இன்னும் ஓடவில்லை

By செய்திப்பிரிவு

கரோனா பரவலை தடுக்க பொது போக்குவரத்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டதால், தமிழகத்தில் சுமார் 4 ஆயிரம் ஆம்னி பேருந்துகள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 6 மாதங்களுக்கு பிறகு ஆம்னி பேருந்து சேவை கடந்த 16-ம் தேதி தொடங்கியது.

அதன்படி, தமிழக அரசின் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடைமுறைகளை பின்பற்றி, சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள பேருந்துகளில் கிருமிநாசினி தெளிப்பு, தூய்மைப்படுத்தும் பணிகள் தினமும் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், கரோனாஅச்சத்தால், பலரும் வெளியூர்பயணங்களை தவிர்க்கின்றனர். இதனால், பல ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளன.

இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கபொதுச் செயலாளர் அ.அன்பழகன் கூறியதாவது:

கரோனா ஊரடங்கு காலத்தில் இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரியில் விலக்குஅளிக்கப்பட்டதால், சில நாட்களாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் அதிகபட்சமாக 470 பேருந்துகள் மட்டுமே இயக்க முடிகிறது. பேருந்துகளில் 60 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 80 சதவீத ஆம்னி பேருந்துகளின் சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. அடுத்த 2 காலாண்டுக்கான சாலைவரியில் 50 சதவீதம் குறைக்க அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்