தீபாவளியையொட்டி மேலும் 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்: தாம்பரம் - ஹைதராபாத் இடையே தினசரி ரயில்

By செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகை நாட்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, மேலும் பல்வேறு இடங்களுக்கு 8 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஜம்நகரில் இருந்து நவ.6-ம்தேதி முதல் வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு (வாரம் 2 முறை) இயக்கப்படும் சிறப்புரயில் (09578) ஞாயிறு, திங்கள்கிழமைகளில் திருநெல்வேலி செல்லும்.

மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து நவ.9-ம் தேதி முதல் வாரந்தோறும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் புறப் படும் சிறப்பு ரயில் (09577 புதன், வியாழக்கிழமைகளில் ஜம்நகர் செல்லும்.

இதேபோல் திருவனந்தபுரம் - கோர்பா வாரம் 2 முறை சிறப்புரயில்கள் (02648/02647) வரும் 22-ம்தேதி முதலும், புரி - சென்னைசென்ட்ரல் இடையே வாராந்திர ரயில்கள் (02859/02860) வரும் 25-ம்தேதி முதலும் இயக்கப்படவுள்ளன.

விசாகப்பட்டினம் - சென்னைசென்ட்ரல் இடையே (02869/02870) வரும் 26-ம் தேதி முதலும், புவனேஸ்வர் - சென்னை சென்ட்ரல் இடையே (12830/12829) வரும் 22-ம் தேதி முதலும், புவனேஸ்வர் - ராமேசுவரம் இடையே (08496/08495) வரும் 23-ம் தேதி முதலும் வாராந்திர ரயில்கள் இயக்கப்படவுள்ளன. மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

இதேபோல், மதுரை - பிகானெர் இடையே வாராந்திர ஏசி ரயில் (06053/06054) வரும் 22-ம் தேதி முதலும், ஹைதராபாத் - தாம்பரம் இடையே தினசரி சிறப்பு ரயில் (02760/02759) வரும் 20-ம் தேதி முதலும் இயக்கப்படவுள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்