தமிழகத்தில் இன்று புதிதாக 3,914 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 87 ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை இன்று (அக். 18) வெளியிட்டுள்ள விவரங்கள்:
"தமிழகத்தில் இன்று புதிதாக 3,914 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 2,319 பேர். பெண்கள் 1,595 பேர்.
இதனால், பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 87 ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 4 லட்சத்து 15 ஆயிரத்து 121 பேர். பெண்கள் 2 லட்சத்து 72 ஆயிரத்து 247 பேர். மாற்றுப்பாலினத்தவர்கள் 32 பேர்.
» அக்.18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்
» அக்டோபர் 18-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்
இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 25 ஆயிரத்து 67 பேர். 13-60 வயதுடையவர்கள் 5 லட்சத்து 76 ஆயிரத்து 333 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 86 ஆயிரம் பேர்.
இன்று 90 ஆயிரத்து 286 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 89 லட்சத்து 46 ஆயிரத்து 566 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று 88 ஆயிரத்து 643 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 86 லட்சத்து 96 ஆயிரத்து 455 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று தனியார் மருத்துவமனைகளில் 29 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 27 பேர் என 56 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 642 ஆக உயர்ந்துள்ளது.
இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய் அல்லாதவர்கள் ஒருவர். இணை நோய் உள்ளவர்கள் 55 பேர்.
இன்று மட்டும் 4,929 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 37 ஆயிரத்து 637 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வரை 39 ஆயிரத்து 121 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் அரசு சார்பாக 66 மற்றும் தனியார் சார்பாக 126 என, 192 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.
சென்னை நிலவரம்
இன்று கரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,036 பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 89 ஆயிரத்து 995 ஆக உயர்ந்துள்ளது. இன்று, 1,359 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 73 ஆயிரத்து 892 ஆக அதிகரித்துள்ளது. இன்று 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,520 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 12 ஆயிரத்து 583 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்".
இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago