கொடைக்கானலில் இருந்து பள்ளங்கி மலைகிராமத்திற்கு சென்ற அரசு பேருந்தில் அதிக பயணிகள் பயணிப்பது கண்டு சுகாதாரத்துறையினர் பேருந்தை பாதிவழியில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டனர். மேலும், போக்குவரத்துத் துறைக்கு அபாரதம் விதித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஞாயி்ற்றுக்கிழமை வாரச்சந்தை கூடும் என்பதால் சந்தைக்குக் கொடைக்கானலை சுற்றியுள்ள மலைகிராமங்களில் இருந்து மக்கள் அதிகளவில் இன்று (அக். 18) வந்திருந்தனர். சந்தையில் பொருட்களை வாங்கிக்கொண்டு தங்கள் ஊருக்கு அரசு பேருந்துகளில் திரும்பினர்.
கொடைக்கானலில் இருந்து பள்ளங்கி மலைகிராமத்திற்கு புறப்பட்டுச் சென்ற அரசு பேருந்தில் 35 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும் என்ற நிலையில் 78 பயணிகள் பயணித்தனர்.
நாயுடுபுரம் பகுதியில் சோதனை நடத்திக்கொண்டிருந்த சுகாதாரத்துறையினர் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதை கண்டு நிறுத்தினர். பேருந்தில் கூடுதல் பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டனர்.
» புதுச்சேரி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் இளைஞர் தற்கொலை
» மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வலியுறுத்தல்
முகக்கவசம் அணியாமல் பயணித்த பயணிகளுக்கு அபாரதம் விதித்தனர். தொடர்ந்து, கூடுதல் பயணிகளை பேருந்தில் பயணிக்க அனுமதித்த ஓட்டநர், நடத்துநர் மற்றும் போக்குவரத்துத் துறைக்கு சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்தனர். அபராத தொகை குறித்து அதிகாரிகளுடன் பேசி முடிவு செய்யப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago