அமமுக பொருளாளர் வெற்றிவேலின் உடல் ஓட்டேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
காங்கிரஸ் கட்சியில் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கிய வெற்றிவேல், பின்னர் அதிமுகவில் இணைந்தார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பாகப் போட்டியிட்டு எம்எல்ஏவானார். பின்னர், 2014-ல் சிறை சென்று வந்த ஜெயலலிதா, மீண்டும் போட்டியிடுவதற்காக, ஆர்.கே.நகர் தொகுதியை விட்டுக்கொடுத்து, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவரானார். இதையடுத்து, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில், பெரம்பூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அதிமுக இரண்டாகப் பிரிந்தபோது, சசிகலா அணியை வெற்றிவேல் ஆதரித்தார். பின்னர் தினகரனுக்கு ஆதரவாக 18 எம்எல்ஏக்கள் பிரிந்தபோது, அதில் வெற்றிவேலும் இடம்பெற்றிருந்தார். இதனால் எம்எல்ஏ பதவியிலிருந்து வெற்றிவேல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து, அமமுகவுக்கு ஆதரவாக இருந்த வெற்றிவேலுக்கு அக்கட்சியின் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து சசிகலாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்.
இந்நிலையில், அவருக்குக் கடந்த வாரம் கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வெற்றிவேலின் உடல்நிலை கடந்த சில தினங்களாக மோசமானது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெற்றிவேல் நேற்று (அக்.15) மாலை காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (அக். 16) வெற்றிவேலின் உடல், கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டது. பின்னர், அவரது உடல் வாகனத்தின் உள்ளே இருந்த நிலையில், அமமுக நிர்வாகிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வெற்றிவேல் இறந்ததால், அவருடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால், அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் வீட்டின் மாடியிலிருந்தே வெற்றிவேலுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதன் பின்னர். அவரது உடல் ஓட்டேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago