சிறுதுளி அமைப்பின் சார்பில், ஆண்டுதோறும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் பிறந்தநாளன்று (அக். 15) மரக்கன்று நடுவது வழக்கம். நடப்பாண்டு கூடுத லாக, சமீபத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நினைவாக ‘எஸ்.பி.பி. வனம்’ உருவாக்க முடிவுசெய்தனர்.
அதன்படி, கோவை வாலாங் குளம் அருகே உள்ள சிறுதுளி அலுவலக வளாகத்தில், மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. எஸ்.பி.பாலசுப் பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண், சகோதரி எஸ்.பி.சைலஜாஆகியோர் காணொலி வாயிலாக மரக் கன்றுகளை நடும் பணியை தொடங்கிவைத்தனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாடகர் நிவாஸ் ஆகியோரும் காணொலி காட்சியில் பங்கேற்று பேசினர்.
நிகழ்ச்சியில் சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மெல்லிசைப் பாடகர் சி.ஜி.குமார் உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் இசையஞ்சலி செலுத்தினர்.
“கோவை மத்திய சிறை வளாகத்தில் எஸ்.பி.பி.யின் வயதை குறிக்கும் வகையில் 74 மரங்களை உள்ளடக்கிய ‘இசை வனம்’ அமைத்து, புல்லாங்குழல் தரும் மூங்கில், சந்தனம், செங்காலி, கருங்காலி மரங்களும்,வீணை, தவில், தபேலா, மிருதங் கம், கஜூரா, உடுக்கை, பம்பை, உருமி போன்ற இசைக்கருவிகளை உருவாக்க பயன்படும் பலா மரமும், தபேலா தரும் வேப்ப மரமும், மகோகனி, சிஷ்யம், ஹார்மோனியம் தரும் தேக்கு மரமும், நாதஸ்வரம் தயாரிக்க பயன்படும் ஆச்சார மரமும் நட்டு, சிறைக் கைதிகள் மூலம் பராமரிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் சிறை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை” என சிறுதுளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago