தூத்துக்குடியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 102 செல்போன்கள் மீட்பு: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உரியவர்களிடம் ஒப்படைத்தார்

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்களில் மூலமாக தொலைந்துபோன செல்போன்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் வழக்குதொடர்பாக 102 செல்போன்களை சைபர் க்ரைம் போலீஸார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதில் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு செல்போன்களை தவறவிட்ட உரிமையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்களில் காணாமல் போன அல்லது தவறவிட்ட செல்போன்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் விசாரணை நடத்தி ரூ.10 லட்சம் மதிப்புள்ள 102 செல்போன்களை சைபர் க்ரைம் போலீஸார் மீட்டுள்ளனர்.

மேலும் செல்போன் திருட்டு தொடர்பான வழக்குகளும் விசாரணையில் உள்ளன. விரைவில் அதில் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்