கொடைக்கானலுக்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சுற் றுலா செல்லும் திட்டம் தொடங்கு வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், வெளிநாட்டு பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடத்திலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இரண்டாமிடத்திலும் உள்ளது. தமிழகத்தில் கொடைக்கானல், கன்னியாகுமரி, தஞ்சாவூர், ராமேசுவரம், மதுரை மற்றும் ஊட்டி உள்ளிட்ட இடங்களுக்கு வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர்.
இவற்றில் அதிகபட்சமாக கொடைக்கானலுக்கு ஆண்டுதோ றும் இஸ்ரேல், கனடா, மலேசியா, அமெரிக்கா, சுவீடன், தென்கொரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து 54 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் 50 சதவீதம் பேர், மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி, ஊட்டிக்கும் செல்கின்றனர்.
மதுரையில் இருந்து பஸ், கார் மற்றும் ரயில் மூலமே இவர்கள் தமிழகத்தின் மற்ற சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. வெளிநாட்டுப் பய ணிகளுக்கு ஏற்படும் இந்த சிரமத்தை தவிர்க்கவும், அவர் களின் வருகையை அதிகரிக்கவும் மதுரையில் இருந்து கொடைக் கானல், ராமேசுவரம், கன்னியா குமரிக்கு ஹெலிகாப்டரில் சுற்றுலா செல்லும் திட்டத்தை செயல்படுத்த 2007-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு சுற்றுலா துறை நடவடிக்கை எடுத் தது.
இதன்ஒருபகுதியாக சில மாதங் களுக்கு முன், கொடைக்கான லில் 4 ஏக்கரில் ஹெலிகாப்டர் தளம் அமைப்பதற்கான இடத்தை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண் டார். ஆனால், ஹெலிப்காப்டர் சுற்றுலா திட்டம் தொடர்ந்து தாமதமாவதால், வெளிநாட்டு பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம், புதுடெல்லியில் உள்ள அரசு சார்பு ஹெலிகாப்டர் நிறுவனம் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள், கொடைக்கானலில் ஹெலிகாப்டர் தளம் அமைப்பதற்காக சில இடங்களை ஆய்வு செய்துள்ளனர்.
இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கொடைக்கானலுக்கு ஆண்டுதோ றும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற் றுலாப் பயணிகள் வருகை அதி கரித்து வருகிறது. 2012-ல் 31,26,064 உள்நாட்டு பயணிகளும் 36,815 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்தனர். 2013-ல் 43,93,331 பேர் உள்நாட்டிலிருந்தும் 44,347 பேர் வெளிநாட்டிலிருந்தும் சுற்றுலா வந்துள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை உயர்ந்து 53,84,093 உள்நாட்டு பயணிகளும் 51,376 பேர் வெளிநாட்டிலிருந்தும் சுற்றுலா வந்துள்ளனர்.
தமிழக சுற்றுலாத்தலங்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகையை 1.5 கோடியாக அதி கரிக்க 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த சுற்றுலாத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அவற்றில் ஒரு நடவடிக்கைதான், இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம்.
புதுடெல்லி நிறுவனம் மூலம் ஆய்வு செய்யப்பட்டதில் ஹெலிகாப்டர் சுற்றுலா அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதனால், விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். மதுரையில் இருந்து 25 நிமிடத்தில் கொடைக் கானல் செல்லும் வகையில் ஹெலி காப்டரை இயக்க திட்டமிடப்பட் டுள்ளது.
இத்திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் கொடைக்கானல் வரும் வெளிநாட்டு மற்றும் உள் நாட்டு பயணிகளின் எண்ணிக்கை யும் கணிசமாக உயரும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago