முதல்வர் தூத்துக்குடி வருவதையொட்டி விதிமுறை மீறி பேனர், பிளக்ஸ் வைக்க தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் முறையீடு

By கி.மகாராஜன்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி வருவதையொட்டி நகரில் விதிமுறை மீறி பேனர், பிளக்ஸ் வைக்க தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ரமேஷ்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்தார்.

அதில், "தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க வரவுள்ளார்.

அவரை வரவேற்கும் வகையில் அ.தி.மு.க. வினர் விதிமுறைகளை மீறி பிளக்ஸ், பேனர் ேபான்றவற்றை அமைத்து வருகின்றனர்.

இதனால் போக்கு வரத்து பாதிப்பு அடைவதுடன், பொதுமக்களும் பாதிக்கப் படுவர். எனவே விதிமுறைகளை மீறி தூத்துக்குடியில் பிளக்ஸ், பேனர் போன்றவற்றை அமைக்க கூடாது எனவும், இதன அவசர வழக்காக எடுத்து உத்தரவிட வேண்டும்" என முறையிட்டார்.

இதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு இதனை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்