ஏழுமலையான் கோயிலில் ஓபிஎஸ் சுவாமி தரிசனம்

By என்.மகேஷ்குமார்

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், வி.சரோஜா ஆகியோர் நேற்று முன்தினம் இரவு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் அம்மனை வழிபட்டனர். பிறகு இவர்கள் காரில் திருமலைக்குச் சென்றனர். இவர்களை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர்.

துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நேற்று முன்தினம் இரவு திருமலையில் தங்கினர்.

நேற்று காலை இவர்கள் ஏழுமலையானை வழிபட்டனர். தேவஸ்தான அதிகாரிகள் இவர்களுக்கு தரிசன ஏற்பாடுகளை செய்தனர். பின்னர் ரங்கநாயக மண்டபத்தில் அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.

இதையடுத்து கோயிலுக்கு எதிரே அகிலாண்டம் அருகில் உள்ள பேடி ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று அங்கு தேங்காய் உடைத்து நால்வரும் வழிபட்டனர். அங்கு பெரிய ஜீயரை சந்தித்து ஆசி பெற்றனர். பின்னர் அனைவரும் சென்னைக்குப் புறப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்