பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உட்பட 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர், டாஸ்மாக் மேலாண் இயக்குனர் உள்ளிட்ட 6 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகம் இன்று பிறப்பித்த உத்தரவு:

1. சமர சிக்‌ஷா திட்ட கூடுதல் இயக்குனர் என்.வெங்கடேஷ் பள்ளிக் கல்வித்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

2. பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக மேலாண் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

3. ஈரோடு வணிகவரித்துறை இணை ஆணையர் கிராந்திகுமார் பதி பழனி தண்டபாணி கோயில் நிர்வாக அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.

4. காஞ்சிபுரம் உதவி ஆட்சியர் சரவணன் ஈரோடு வணிகவரித்துறை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

5. மாநில டாஸ்மாக் துறை மேலாண் இயக்குனர் கிர்லோஷ்குமார் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

6. மாநில மது மற்றும் கலால் துறை ஆணையர் மோகன் டாஸ்மாக் மேலாண் இயக்குனராக முழுப் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்