ரஜினி நடிப்பில் ‘அண்ணாத்த’ திரைப்படம் தயாராகி வருகிறது. 2021 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் வகையில் நவம்பரில் ரஜினி கட்சி தொடங்க வாய்ப்பு இருப்பதாக ரஜினி மக்கள் மன்றத்தினர் மத்தியில் பேச்சு நிலவுகிறது. இந்த சூழலில், மக்கள் மன்ற நிர்வாகிகள் தமிழகத்தின் சில முக்கிய கோயில்களில் ரஜினிக்காக அவரது குடும்பத்தினரின் ஏற்பாட்டில் சிறப்பு பூஜை செய்து, அவருக்கு பிரசாதம் அனுப்பிவருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பழைய அனந்தபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீசதாசிவ சத்யநாராயணா கோயிலில் சமீபத்தில் ரஜினிக்காக பிரத்யேகமாக பூஜை நடத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்ட மக்கள் மன்ற துணை செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் இந்த பூஜையை செய்துள்ளார். காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாநில செயலாளராக இருந்த அவர், அங்கிருந்து விலகி, ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்தவர்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் அவர் கூறியதாவது:
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்ததுமான சதாசிவ சத்யநாராயணா கோயிலில் சிவன், விஷ்ணுவை ஒருசேர தரிசிக்க முடியும். கேரளசன்னியாசி ஒருவர் தன் சொந்த செலவில் இக்கோயிலை புனரமைத்து பூஜை செய்துவருகிறார். ரஜினியின் குடும்பத்தினர்தான் இக்கோயிலை தேர்ந்தெடுத்து சிறப்பு பூஜை செய்யுமாறு கூறினர். இது அரசியலுக்காக நடத்தப்பட்ட பூஜை அல்ல. ரஜினி நீண்ட ஆயுள், ஆரோக்கியத்தோடு இருந்து, மக்களுக்கு தொடர்ந்து நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக பூஜை நடத்தப்பட்டது. தமிழகத்தில் வேறு சில பாரம்பரியப் பெருமைமிக்க கோயில்களிலும் ரஜினிக்காக பூஜைகள் நடத்தப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago