சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை 23-ம் தேதி சிவக்குமார், ரகு, பாபு உள்ளிட்ட 9 மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றனர். நீண்ட நாட்களாகியும் கரைக்கு திரும்பாத நிலையில், அவர்களை தேடும்பணி நடந்துவந்தது. இந்நிலையில், மியான்மர் நாட்டு கடற்படையினரால் கடந்த மாதம் 14-ம் தேதி மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
படகின் இறக்கையில் சிக்கியகயிறை அகற்றும்போது பாபுஎன்ற மீனவர் கடலில் காணாமல்போனார். மற்ற 8 மீனவர்களையும் சென்னைக்கு அழைத்து வரநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் டெல்லி வந்து, அங்கிருந்து நேற்று காலை சென்னை வந்தடைந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் அவர்களை மீன்வளத்துறைஅமைச்சர் டி.ஜெயக்குமார் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அவர்களுக்கு மாற்று உடை, போக்குவரத்து செலவுக்கான பணத்தையும் வழங்கினார். அப்போது மீன்வளத்துறை இயக்குநர் சமீரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ‘‘மத்திய, மாநில அரசுகள் எடுத்த முயற்சியால் ‘வந்தே பாரத்’ திட்டத்தின்கீழ் விமானத்தில் மீனவர்கள் சென்னை வந்தடைந்துள்ளனர். காணாமல் போன மீனவர் பாபுவை தேடும் பணி நடந்து வருகிறது" என்றார்.
மீட்கப்பட்ட மீனவர் ரகு கூறியபோது, ‘‘கடலுக்குள் சென்ற 4-வது நாளில் படகின் இன்ஜின் பழுதடைந்துவிட்டது. 17-வது நாள் இலங்கை படகு ஒன்று வந்தது. அவர்கள் முடிந்த அளவு உதவி செய்தனர். இன்ஜினை இயக்க முடியாததால் படகை கயிறு கட்டி இழுக்க முயற்சித்தனர். அவர்களின் படகு உடையும் நிலை ஏற்பட்டதால் திரும்பிச் சென்றுவிட்டனர். கைவசம் இருந்த உணவு, தண்ணீர் எல்லாம் தீர்ந்துபோனது. சில நாட்களாக கடும் தவிப்பில் இருந்தோம். மியான்மர் நாட்டு படகில் வந்த மீனவர்கள் மூலமாக தகவல் தெரிந்து, அந்நாட்டு கடற்படையினர் எங்களை பத்திரமாக மீட்டனர்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
21 hours ago