மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ‘நம்ம சென்னை ஏர்போர்ட் டர்ன்ஸ் பிங்க்’ நிகழ்ச்சி

‘நம்ம சென்னை ஏர்போர்ட் டர்ன்ஸ் பிங்க்’ என்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை விமான நிலையத்தில் நடத்தப்பட்டது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோய் முதலிடம் வகிக்கிறது. இதை ஒழிக்கும் விதமாக ‘மார்பக புற்றுநோய் இல்லாத இந்தியா 2030’ என்ற குறிக்கோளுடன் மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு, மார்பக சுய பரிசோதனை பயிற்சி, நோயை எளிதில் கண்டறியும் முறை குறித்து கல்லூரி மாணவர்கள், சுய உதவிக் குழு பெண்கள், கிராமப்புற பெண்களுக்கு கூறப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் ‘ஏர்போர்ட் டர்ன்ஸ் பிங்க்’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது.

இந்தியா டர்ன்ஸ் பிங்க் அமைப்பு, ஏர்போர்ட் அதாரிட்டி ஆஃப் இந்தியா, கல்யாண்மாயி சார்பில் சென்னை விமான நிலையத்தில் கடந்த அக்.1-ம் தேதி ‘நம்ம சென்னை ஏர்போர்ட் டர்ன்ஸ் பிங்க்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சென்னை விமான நிலையஇயக்குநர் சுனில்தத் தலைமை தாங்கினார். இந்தியாடர்ன்ஸ் பிங்க் அமைப்பு நிறுவனர் ஆனந்தகுமார் வரவேற்றார். வேல்ஸ் குழும கல்விநிறுவனங்களின் துணைத்தலைவர் ப்ரீதா கணேஷ், நடிகை ரித்விகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்