கரோனா நோயாளிகள், மருத்துவர்களுக்கு வழங்கப்படும் உணவு கொள்முதலில் முறைகேடு?- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

By கி.மகாராஜன்

தமிழகத்தில் கரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் கரோனா நோயாளிகளுக்கு உணவு கொள்முதல் செய்வதில் நடைபெறும் முறைகேடு குறித்து விசாரிக்கக்கோரிய மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த எம்.லியோனல் அந்தோணி ராஜ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் கரோனா நோயாளிகளுக்கும், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் அரசு செலவில் உணவு வழங்கப்படுகிறது. இதற்காக அரசு பல கோடி ரூபாய் செலவிடுகிறது.

ஆனால் அதிகாரிகள் உணவகங்களை நேரில் அணுகி குறைந்த விலைக்கு தரம் குறைந்த உணவு வாங்கி வழங்குகின்றனர்.

கரோனா நோயாளிகள், மருத்துவர்களுக்கு உணவு கொள்முதல் செய்வதில் பெரியளவில் முறைகேடு நடைபெறுகிறது.

எனவே கரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், கரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவ. 6-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்