அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டதால், தேனி மாவட்ட அதிமுகவினர் எவ்வித கொண்டாட்டத்திலும் ஈடுபடாமல் வருத்தத்தில் அமைதியாக இருந் தனர்.
அதிமுகவில் முதல்வர் வேட் பாளரைத் தேர்வு செய்வது தொடர்பாக, கடந்த ஒரு வாரமாக சர்ச்சை நிலவியது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே தங்களது ஆதர வாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தனர்.
துணை முதல்வர் பெரியகு ளத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் 3 நாட்களாக ஆதர வாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வமே மக்களின் முதல்வர். அவரைத்தான் முதல் வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், முதல்வர் வேட்பாளராக பழனிசாமி பெ யரை ஓ.பன்னீர்செல்வமே அறி வித்தார்.
இதனால் அவரது ஆதரவா ளர்கள் வருத்தமடைந்தனர்.
துணை முதல்வரின் சொந்த மாவட்டமான தேனியில் பட் டாசு, இனிப்பு எனக் கொண் டாட நினைத்திருந்த கட்சியினர் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என அறிவிப்பு வெளியானதும் கொண்டாட்டத்தில் ஈடுபடாமல் அமை தியாக இருந்து விட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago