தமிழகத்தில் இன்று புதிதாக 5,447 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 35 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் 1,369 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 76 ஆயிரத்து 779 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பின் இன்றைய (அக். 7) நிலவரம் தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:
தமிழகத்தில் இன்று புதிதாக 5,447 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 3,338 பேர். பெண்கள் 2,109 பேர்.
தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 35 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 3 லட்சத்து 83 ஆயிரத்து 967 பேர். பெண்கள் 2 லட்சத்து 51 ஆயிரத்து 857 பேர். மாற்றுப்பாலினத்தவர்கள் 31 பேர்.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 24 ஆயிரத்து 499 பேர். 13-60 வயதுடையவர்கள் 5 லட்சத்து 29 ஆயிரத்து 342 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 82 ஆயிரத்து 14 பேர்.
இன்று 93 ஆயிரத்து 242 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 79 லட்சத்து 57 ஆயிரத்து 106 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று 91 ஆயிரத்து 401 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 77 லட்சத்து 25 ஆயிரத்து 962 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று தனியார் மருத்துவமனைகளில் 32 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 35 பேர் என 67 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,984 ஆக உயர்ந்துள்ளது.
இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 6 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 61 பேர்.
இன்று 5,524 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 736 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வரை 45 ஆயிரத்து 135 பேர் (தனிமைப்படுத்தலில் இருப்போர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் அரசு சார்பாக 66 மற்றும் தனியார் சார்பாக 124 என, 190 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.
சென்னை நிலவரம்
தமிழகத்தில் இன்று கரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக, 1,369 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 76 ஆயிரத்து 779 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,096 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 333 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 3,336 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 13 ஆயிரத்து 110 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்".
இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago