காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை தரம் உயர்த்துக: கார்த்தி சிதம்பரம் எம்.பி. வலியுறுத்தல்

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்த கார்த்தி சிதம்பரம் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கையில் வட்டார போக்குவரத்து அலுவலகமும், காரைக்குடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன.

வாகன பெர்மிட் உள்ளிட்டவைக்கு வட்டார போக்குவரத்து அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். இதனால் காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவகங்கை வர வேண்டியுள்ளது.

இதனால் சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தநிலையில் காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்த வேண்டுமென அப்பகுதி வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி ஆகிய 4 வட்டங்களை இணைத்து காரைக்குடியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் திடீரென கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை தரம் உயர்த்த வேண்டுமென, கார்த்திசிதம்பரம் எம்பி போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வாகன பதிவு, தணிக்கை சான்று, ஓட்டுநர் உரிமம் பெற உள்ளிட்ட பணிகளுக்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இதனால் காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை வட்டார போக்குவரத்து அலுவலகம் யூனிட்-2 ஆக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்