வனக் காப்பாளர் பணிக்கான தேர்வு எழுதியவர்கள் விடையைச் சரிபார்த்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. நாளை தொடங்கி 10-ம் தேதி வரை கிடைக்கும் இந்த வசதியைத் தேர்வு எழுதியவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
''தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம், தமிழ்நாடு வனத்துறையில் வனக் காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு விளம்பர எண்.2/2019, நாள்: 30.11.2019 மூலம் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கான இணையவழித் தேர்வு மார்ச் 8 ஆம் தேதி அன்று நடைபெற்றது.
2) மேற்படி தேர்வுகளுக்கான கேள்வி-பதில் சவால் அக்டோபர் 07 (முற்பகல் 9 மணி) முதல் அக்டோபர் 10 (முற்பகல் 9 மணி) வரை கிடைக்கும். மேலும் தகவலுக்கு விண்ணப்பதாரர்கள் https://www.forests.tn.gov.in-ஐப் பார்வையிடலாம்''.
இவ்வாறு தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago