திருப்பூரில் நகை வாங்குவது போல் நடித்து நூதன முறையில், 54 பவுன் நகைகளைத் திருடிய, 2 பெண்கள் உட்பட 3 பேரை சிசிடிவி கேமராவில் பதிவான அடையாளத்தைக் கொண்டு, திருப்பூர் போலீஸார் ஆந்திரா வரை சென்று விசாரித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ளது அம்மன் ஜூவல்லரிக் கடை. இங்கு 54 பவுன் நகை திருடப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. கடை யில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைப் பார்த்தபோது, 3 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
நகைக் கடைக்கு, கடந்த 1-ம் தேதி பகல் 2.20 மணிக்கு இளை ஞருடன் 2 பெண்கள் வந்துள்ள னர். வீட்டில் நடைபெறும் விசேஷத் துக்கு நகைகள் வாங்குவதாகக் கூறி, பல்வேறு மாடல்களை பார்வையிட்டுள்ளனர்.
இதைத் தவிர புதிய மாடல் களைக் காட்டுமாறு அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, கடையில் உள்ள ஒரு அறைக்குள் நகைகளை எடுத்து வரச் சென் றுள்ளார் கடை ஊழியர். அப் போது மற்றொருப் பெண், கடையில் அமர்ந்திருந்த மற்றொரு ஊழியரிடம், குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளார். அவர் தண்ணீர் எடுக்க குனிந்த நேரத்தில், அந்த இளைஞர், ஒரு பெட்டியில் இருந்த நகைகளை எடுத்து, அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். அந்த பெண் தனது உள்ளாடையில் பிரத்யேகமாக தைக்கப்பட்டிருந்த பையில், அந்த நகைப் பெட்டியை வைத்து மறைத்துள்ளார். பின், கடை ஊழியர்களிடம் மாடல் எதுவும் பிடிக்கவில்லை எனக் கூறி மூவரும் சென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் கடை ஊழியர் கள் நகைகளின் இருப்புகளை சரிபார்த்தபோது, 54 பவுன் நகை குறைந்திருப்பது தெரியவந்துள் ளது. இதுகுறித்து கடை உரிமை யாளரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கேமராவில் பதிவான ஆதாரங்களுடன், நகைக் கடை உரிமையாளர் திருப்பூர் போலீஸாரிடம் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின் றனர். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
51 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago