காட்டு யானைகள் பீதியில் கோவை கிராமங்கள்: போதிய வாகனங்கள் இல்லாமல் வனத்துறை திணறல்

By கா.சு.வேலாயுதன்

காட்டு யானை பீதியில் கோவையில் பல்வேறு கிராமங்கள் பீதியில் உறைந்திருக்க, அவற்றை கட்டுப் படுத்த போதுமான பாதுகாப்பு வாகனங்கள் இல்லாமலும், உள்ள வாகனங்களை பராமரிப்பதில் சிக்கல் உள்ளதாலும் வனத்துறையினர் திணறி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

மேற்குத் தொடர்ச்சி மலையடி வாரத்தில் அடர்ந்த வனம் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள கோவை மாவட்டத்தில், மொத்தம் 6 வனக் கோட்டங்கள் உள்ளன. கோவை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன் பாளையம், காரமடை, மேட்டுப் பாளையம், சிறுமுகை என பிரிக் கப்பட்டுள்ள இவ்வனக்கோட்டங் களில், கோவை மாநகரின் மேற்கு, வடமேற்கு, தென்மேற்கு எல்லைப் பகுதிகள் பெரும்பாலும் மலைக்காடுகளை ஒட்டியே அமைந்துள்ளன. இதனால் இப்பகுதிகளில் வனவிலங்குகளின் ஊடுருவல் மிக அதிகம். வேளாண் பயிர்ச்சேதம் மற்றும் மனித உயிர்கள் இழப்பு ஆகியவை தொடர் கதையாகவே நீடிக்கிறது.

கோவை அருகே மதுக்கரை குரும்பபாளையத்தில் ஒற்றை யானை ஊடுருவலைக் கட்டுப் படுத்த தற்போது சுஜய், பாரி ஆகிய கும்கி யானைகள் முகாமிட்டுள்ளன.

இச்சூழ்நிலையில் ஆனைகட்டி செல்லும் சாலையில் உள்ள மாங்கரை கிராமத்தில் யானைகள் கூட்டம் இரவு பகல் என்றில்லாமல் நுழைந்து விடுகிறது என்கிறார்கள். அப்பகுதியினர். அவர்கள் கூறியதாவது:

யானைக்கூட்டம் தோட்டங்களில் உள்ள பயிர்களை அழிக்கிறது. இன்னொரு பக்கம் யானைக் கூட்டத்தை மையமாக கொண்டு திரியும் ஒற்றை யானை வீடுகளை இடிக்கிறது. இப்படி கடந்த 2 மாதத்தில் மட்டும் 8 வீடுகளை இடித்துள்ளன. போடப்பட்ட கம்பிவேலியை கொம்புகளை விட்டு பின்னிச்சுருட்டி கத்திரித்துவிட்டு தோட்டங்களுக்குள் செல்கின்றன.

வீட்டை சுற்றி போடப்பட்ட தடுப்பு வேலிகளை யானைகள் உடைத்து விடுவதால் மரத்தடுப்புக்களை புதிதாக அமைப்பதே தினசரி பணியாக உள்ளது.

யானைகள் புகுந்தவுடன் இது பற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தாலும் யாரும் வருவதில்லை. ‘எங்களிடம் யானை விரட்டும் பாதுகாப்பு வாகனம் இல்லாத காரணத்தால் வர இயலாது’ என வனத்துறையினர் பதில் தெரிவிக்கின்றனர்.

கடந்த திங்கள்கிழமை மதியம் மாங்கரை சோதனைச்சாவடிக்கு சிறிது தூரத்திலேயே ஒற்றை யானை பலரை துரத்தி உள்ளது என்றனர்.

கிராமமக்களின் இந்த நிலை குறித்து இப்பகுதி வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ஒரு வனக்கோட்டத்துக்கு ஒரு யானைத்தடுப்பு வாகனமாவது இருக்க வேண்டும். ஆனால் மொத்தமே 6 கோட்டத்துக்கும் சேர்த்து இரண்டு தான் உள்ளது. கூடுதல் வாகனங்கள் தேவை பற்றி அரசுக்கு தெரிவித்துள்ளோம். வனக்கோட்டங்களில் உள்ள வனத்துறை அலுவலகங்களில் பணிபுரியும் 6 வனக்கோட்ட அலுவலர்களுக்கு, கடந்த 2௦௦6-ம் ஆண்டு வழங்கப்பட்ட ஜீப்களும், தற்போது பராமரிப்பின்றி, கரடு முரடான காட்டுப் பகுதியில் பயணிக்க முடியாத நிலையிலேயே உள்ளது. இதனால் யானைகள் புகும் இடங்களுக்கு மட்டுமல்ல, கேரள எல்லையில் உள்ள கோவை வனப்பகுதியில் நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் கண்காணிப்புப் பணிக்குக் கூட செல்ல முடிவதில்லை’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்