நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அரசு போக்குவரத்துக் கழத்தை மேம்படுத்த தேவைப்பட்டால் சட்டம் கொண்டு வரவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் மேலாண்மை இயக்குனராக பணிபுரிந்தவர் எஸ்.வி.சுப்பையா. இவர் 2015-ல் ஓய்வு பெற்றார். இவர் தனக்குரிய 2009 முதல் 2013 ஆண்டு வரையிலான விடுமுறை ஒப்படைப்பு பணம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட நிதி ஆகியவற்றை 18 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார்.
போக்குவரத்து கழகம் வழக்கறிஞர் வாதிடுகையில், போக்குவரத்து கழகம் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. இதனால் மனுதாரருக்கு விடுமுறை ஒப்படைப்பு பணம் வழங்கப்படவில்லை. மனுதாரர் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கும் விடுமுறை ஒப்படைப்பு பணம் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர்கள் பணப்பலன்களை பெற வீதிக்கு வந்து போராடுகின்றனர். அதன் பிறகே அரசு இடைக்கால நிவாரணம் வழங்குகிறது. அரசு போக்குவரத்து கழகத்தில் இந்த நிலை எவ்வளவு நாளுக்கு தொடரும் என்பது யாருக்கும் தெரியாது.
வருங்காலத்தில் அரசு போக்குவரத்து கழகத்தை லாபகரமாக இயக்கவும் நிதி நிலைமையை எவ்வாறு மேம்படுத்தலாம், அதற்கு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை அரசும், போக்குவரத்து கழகமும் யோசிக்க வேண்டும்.
அரசு போக்குவரத்து கழகத்தின் நிர்வாகத்தை முறைப்படுத்த அரசு கொள்கை முடிவு எடுப்பதுடன் தேவைப்பட்டால் சட்டமும் நிறைவேற்றவும் நடவடிக்கை வேண்டும்.
அரசு போக்குவரத்து கழகத்தில் பல ஆண்டுகளாக மேலாண்மை இயக்குனராக பணிபுரிந்த ஒருவர் விடுமுறை ஒப்படைப்பு பணத்தை பெற 5 ஆண்டுகள் காத்திருப்பது பரிதாபகரமான சூழ்நிலையாகும். மனுதாரருக்கு 3 மாதத்தில் விடுமுறை ஒப்படைப்பு பணம் வழங்குவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி மனுதாரருக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago