தேர்தலுக்குப் பிறகு பாஜக உறவு: அதிமுக, திமுக நிலை என்ன?- ப.சிதம்பரம் கேள்வி

மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்தியில் ஆட்சியமைக்க இரு கட்சிகளால் மட்டுமே முடியும். ஒன்று காங்கிரஸ் கட்சி, மற்றொன்று பாஜக. இந்த இரு கட்சிகளுடனான தங்கள் நிலைப்பாட்டை அதிமுகவும் திமுகவும் இன்னும் தெளிவாக்கவில்லை.

ராமர் கோயில் கட்டுவது, கர சேவை, சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவது, பொதுசிவில் சட்டம் போன்றவற்றில் பாஜக, அதிமுக கட்சிகளுக்கும் ஒரே கொள்கைகள்தான். மோடியின் நிர்பந்தத்தால்தான் கம்யூனிஸ்டு கட்சிகளை ஜெயலலிதா கழற்றி விட்டுள்ளார்.

ஒரு கூட்டத்தில்கூட பாஜகவையோ, மோடியையோ விமர்சிப் பது கிடையாது. ஒருவேளை மத்தியில் ஆட்சி அமைக்க பாஜக முற்பட்டால் அதற்கு ஆதரவுக் கரம் நீட்டும் முதல்கட்சியாக அதிமுக இருக்கும்.

திமுகவின் நிலை

திமுகவைப் பற்றிக் கூறுவதென்றால், 1999-ம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்தது வரலாற்றுப் பிழை. ‘சிறுபான்மை சமுதாயத் தினருக்கு எந்த பாதிப்பும் ஏற் படாது’ என்று பாஜக வாக்குறுதி கொடுத்திருந்தால் அந்த வாக் குறுதி மீறப்பட்டது என்பதே உண்மை.

‘ராஜதர்மத்தை மீறினார்’ என்று வாஜ்பாயால் சித்தரிக்கப்பட்ட மோடி, சிறுபான்மை மக்களை எவ் வாறு இழிவுபடுத்தினார் என்பதை கருணாநிதி நினைவுகூர வேண் டும். மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு கோரினால் ஆதரிக்க மாட்டோம் என்று தெரிவித்தால் மட்டுமே திமுகவின் நிலைப்பாடு தெளிவாகும்.

மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமைய விரும்பும் சிறுபான்மையி னர், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட சமுக மக்கள் இதையே திமுகவிடம் இருந்து எதிர்பார்க் கின்றனர். இவ்வாறு அறிக்கையில் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE