சிவகங்கை மாவட்டத்தில் தடையை மீறி 127 இடங்களில் திமுக சார்பில் கிராமசபைக் கூட்டங்கள் நடந்தன. இதையடுத்து திருப்பத்தூர் எம்எல்ஏ கே.ஆர்.பெரியகருப்பன் உட்பட 331 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்தனர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்ற தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்களை நடத்த அரசு உத்தரவிட்டது.
இந்த கிராமசபைக் கூட்டங்களில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக தீர்மானங்களை கொண்டு வர வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக திடீரென கிராமசபை கூட்டங்களுக்கு அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி திமுக சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் 127 இடங்களில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
» நெல்லையில் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக சுவரொட்டிகள்: அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு
» அக். 3 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்
இதையடுத்து தடையை மீறி கிராமசபைக் கூட்டங்கள் நடத்தியதாக திருப்பத்தூர் எம்எல்ஏ கே.ஆர்.பெரியகருப்பன் உட்பட 331 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago