எம்.பி, எம்எல்ஏக்கள் தொடர்புடைய அரசியல் வழக்குகளை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்: அரசு வழக்கறிஞர்களுக்கு திடீர் உத்தரவு

By கி.மகாராஜன்

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கலாகும் எம்.பி, எம்எல்ஏக்கள் தொடர்புடைய அரசியல் வழக்குகளை தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு தகவல் தெரிவித்த பிறகே நடத்த வேண்டும் என அரசு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அக். 5 முதல் நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், என்.நிஷாபானு, ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.தாரணி, டி.கிருஷ்ணவள்ளி, இளந்திரையன் ஆகியோர் குற்றவியல் வழக்குகளை விசாரிக்கின்றனர்.

இந்த நீதிமன்றங்களின் பொறுப்பு கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்களின் பட்டியலை தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் இன்று வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக உயர் நீதிமன்ற கிளை கூடுதல் அரசு வழக்கறிஞர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அனைத்து அரசு வழக்கறிஞர்களும் தவறாமல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். விடுமுறை எடுத்தால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் பொறுப்பு கூடுதல் அரசு வழக்கறிஞர் மற்றும் பிற அரசு வழக்கறிஞர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஒரு வாரத்துக்கு மேல் விடுமுறை வேண்டும் என்றால் தலைமை குற்றவியல் வழக்கறிஞரிடம் அனுமதி பெற வேண்டும்.

அரசு வழக்கறிஞர்கள் அனைவரும் நீதிமன்ற பொறுப்பு கூடுதல் அரசு வழக்கறிஞர்களின் உத்தரவுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும், அனைத்து அரசு வழக்கறிஞர்களும் தாங்கள் ஆஜராகும் வழக்குகள் தொடர்பாக அதிகாரிகளிடமிருந்து முழுத் தகவல்களை பெற்று உரிய முறையில் வழக்குகளை நடத்த வேண்டும்.

முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தால் வழக்கு தொடர்பாக அரசிடமிருந்து முழுமையாக தகவல் பெற்று வழக்கை திறம்பட நடத்த வசதியாக அந்த வழக்கு தொடர்பாக தாமதமில்லாமல் நீதிமன்றத்தின் பொறுப்பு கூடுதல் அரசு வழக்கறிஞர் மற்றும் தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தொடர்பான அரசியல் வழக்குகளை தலைமை குற்றவியல் வழக்கறிஞர் மற்றும் நீதிமன்ற பொறுப்பு கூடுதல் அரசு வழக்கறிஞருக்கு தகவல் தெரிவித்த பிறகே நடத்த வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

2 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்