தூத்துக்குடியில் திமுக சார்பில் நடைபெற்ற சிறப்பு ரத்ததான முகாமை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்து, முதல் நபராக ரத்ததானம் வழங்கினார்.
தூத்துக்குடி மாநகர திமுக சார்பாக ரத்ததான முகாம் கலைஞர் அரங்கில் வைத்து இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பெ.கீதாஜீவன் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்த சேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு தானே முதல் நபராக ரத்ததானம் வழங்கி, முகாமை தொடங்கி வைத்தார்.
» திமுகவில் ராஜகண்ணப்பனுக்குப் புதிய பதவி: புதிய நிர்வாகிகளை நியமித்து துரைமுருகன் அறிவிப்பு
தூத்துக்குடி மாநகர பகுதிகளை சேர்ந்த திமுக தொண்டரணி மற்றும் இளைஞரணியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் ரத்ததானம் வழங்கினர். ரத்ததானம் வழங்கியவர்களை கனிமொழி எம்பி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் திமுக தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் ரமேஷ், பொறியாளரணி அன்பழகன், மகளிர் அணி கஸ்தூரி தங்கம், வழக்கறிஞர் அணி மோகன்தாஸ் சாமுவேல், மீனவர் அணி அந்தோணி ஸ்டான்லி, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அருண் சுந்தர், செல்வின், முத்துராமன், சங்கரநாராயணன், ராகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் கேப்ரியல் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago