திமுக தலைமைக் கழகத்தில் சில முக்கியப் பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பு:
''தேர்தல் பணிக்குழு இணைத் தலைவராக ராஜகண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் பணிக்குழுச் செயலாளர்களாக, வேலூர் ஞானசேகரன், வேலூர் விஜய், பரணி இ.ஏ.கார்த்திகேயன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
» நாளை யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு: தேர்வு நடைமுறை, தேர்வர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விவரம்
தலைமைக் கழகச் செய்தித்தொடர்புச் செயலாளராக பி.டி.அரசகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தீர்மானக் குழுச் செயலாளராக ஏ.ஜி.சம்பத்தும், தீர்மானக் குழு இணைச் செயலாளராக மு.முத்துசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தீர்மானக் குழு உறுப்பினர்களாக ஆ.நாச்சிமுத்து, வீரகோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விவசாய அணி இணைச் செயலாளர்களாக எஸ்.கே.வேதரத்தினம், குறிஞ்சி என்.சிவகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். விவசாய அணி துணைச் செயலாளராக அன்னியூர் சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ அணி துணைத் தலைவராக டாக்டர் எ.வ.வே.கம்பனும், மருத்துவ அணி இணைச் செயலாளராக டாக்டர் இரா.இலட்சுமணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மீனவர் அணிச் செயலாளராக ஆர்.பத்மநாபன், மீனவர் அணி துணைச் செயலாளராக துறைமுகம் சி.புளோரன்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளராக அடையாறு ஷபீல் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே நியமிக்கப்பட்டவர்களுடன் இவர்கள் இணைந்து பணியாற்றுவார்கள்''.
இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago