பெரியாறு அணையிலிருந்து அக். 7-ம் தேதி முதல் 120 நாட்கள் தண்ணீர் திறப்பு: முதல்வர் பழனிசாமி உத்தரவு

By செய்திப்பிரிவு

பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக வரும் 7-ம் தேதி முதல் 120 நாட்கள் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி இன்று (அக். 3) வெளியிட்ட அறிக்கை:

"தேனி மாவட்டத்தில் உள்ள பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 100 கன அடி வீதம் பாசனத்திற்காக வரும் 7-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு மொத்தம் 1,037 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், தேனி மாவட்டம், தேனி வட்டம் மற்றும் உத்தமபாளையம் வட்டங்களில் உள்ள 5,146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், பெரியாறு அணையிலிருந்து 18-ம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

"தேனி மாவட்டம், பெரியாறு அணையிலிருந்து 18-ம் கால்வாயில் (பழனிவேல் ராஜன் கால்வாய்) தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, தேனி மாவட்டம், 18-ம் கால்வாயின் (பழனிவேல் ராஜன் கால்வாய்) கீழ் உள்ள 4,614.25 ஏக்கர் ஒருபோக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து வரும் 70-ம் தேதி முதல் 30 நாட்களுக்கு, விநாடிக்கு 98 கன அடி வீதம், மொத்தம் 255 மி.கன அடி தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், தேனி மாவட்டம், 18-ம் கால்வாயின் கீழ் உள்ள 4,614.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்