கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் தரமில்லாத உணவு வழங்குவதாக புகார்

By செய்திப்பிரிவு

கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் தரமில்லாத உணவு வழங்குவதாகக் கூறி, மதிய உணவைப் புறக்கணித்து நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் கரோனாபாதிப்புக்குள்ளானவர்களுக்கு, திருப்பூர்- காங்கயம் சாலையிலுள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் சித்த மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. 100 பேர் வரை சிகிச்சை பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில், தற்போது77 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தரமான உணவுவழங்கப்படுவதில்லை எனவும், பலருக்கு போதிய உணவு வழங்கப்படுவதில்லை எனவும் கூறி சக நோயாளிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதற்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டுமென, மருத்துவ உலகம் வலியுறுத்துகிறது.

ஆனால், இங்கு தரமற்றதாகவும், பற்றாக்குறையாகவும் உணவு வழங்குகின்றனர்" என்றனர்.

சித்த மருத்துவப் பிரிவில் சிகிச்சை பெறும் உள் நோயாளி ஒருவர் கூறும்போது, "ரசத்தை டம்ளரில் ஊற்றி வைத்துவிட்டு பிறகு சாப்பிடலாம் என ஒருவர் நினைத்திருந்தார். அவரது ரசத்தில்ஈக்கள் இறந்து மிதந்தன. இதுதொடர்பாக வருவாய்த் துறை அலுவலரிடம் புகார் அளித்துள்ளோம்" என்றார்.

இதுதொடர்பாக நோயாளிகளிடம் பேச்சுவார்த்தையில் மருத்துவர்கள் ஈடுபட்டும் உடன்பாடு ஏற்படாததால், தெற்கு வட்டாட்சியர் சுந்தரம் மற்றும் அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தட்டுப்பாடு இன்றியும், தரமாகவும் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து, அனைவரும் மதிய உணவை சாப்பிட்டனர்.

மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சி.தனம் கூறும்போது, "கடந்த 2 நாட்களாக உணவு சரியாகஇல்லை என நோயாளிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஒருவருக்கு நாளொன்றுக்கு சுமார் ரூ.250 வரை உணவுக்கு செலவு செய்கிறோம். உணவு வழங்கும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. திடீரென நோயாளிகள் வார்டில் சேர்க்கப்படுவதால், எண்ணிக்கையில் சில முரண்பாடுகள் ஏற்பட்டுதான் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும். தரமாக உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ரசத்தில் ஈக்கள் எதுவும் மிதக்கவில்லை" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்