நெல்லையில் 15 அடி உயர துணியில் காந்தியடிகள் ஓவியம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி சிவராம் கலைக்கூடத்தில் பயிலும் ஹன்சிகா, அர்ஜூன் ஆகிய மாணவர்கள் 15 அடி உயர துணியில் காந்தியடிகளின் உருவப்படத்தை வரைந்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காட்சிப்படுத் தியிருந்தனர். இந்த மாணவர் களை மாநகராட்சி ஆணையர் கவுரவித்து, கேடயம் பரிசு வழங் கினார். மாநகர நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், சிவராம் கலைக்கூட ஓவிய ஆசிரியர் கணேசன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் அவர்களது சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டப் பொறுப் பாளர் பெ.கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் மாநகராட்சி பழைய அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்செந் தூரில் உள்ள காந்தி, காமராஜர் சிலைகளுக்கு கனிமொழி எம்பி, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

அதிமுக

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் சந்தானம் தலைமையிலும் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையிலும், கோவில்பட்டியில் காந்தி மண்டபத்தில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சிவபெருமாள் தலைமையிலும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

தென்காசி

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வாசுதேவநல்லூர் எம்எல்ஏ அலுவலகத்தில் மனோகரன் எம்எல்ஏ காந்தி படத்துக்கு மாலை அணிவித்தார்.

இலஞ்சி குமரன் கோயில் சாலையில் உள்ள காங்கேயன்குளத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. தென்காசி வருவாய் கோட்டாட்சியர் பழனிக்குமார், மூத்தகுடிமக்கள் அமைப்பின் நிர்வாகி துரை தம்புராஜ், மேலகரம் பேரூராட்சி அலுவலர் பந்துரு நிஷா, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கடையம் அருகே சிவசைலத்தில் உள்ள அவ்வை ஆசிரமத்தில் காந்தி ஜெயந்தி விழாவை காந்தி கிராம அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சிவக்குமார் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். ஆழ்வார்குறிச்சி வாமா அறக்கட்டளை அறங்காவலர்கள் முத்துக்குமாரசுவாமி, சுந்தரம், ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டையில் நகர காங்கிரஸ் தலைவா் ராமர் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளா் முத்துசாமி மற்றும் நிர்வாகிகள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இலஞ்சி பாரத் பள்ளியில் இணையவழியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சுதாமதி, சென்னை வணிக வளர்ச்சி துணை மேலாளர் பாலாஜி, பள்ளி முதல்வர் வனிதா, தலைமையாசிரியர் காவை கணேஷ், தாளாளர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சங்கரன்கோவில் கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி நிர்வாக இயக்குநர் ராஜேஸ்கண்ணா, பள்ளி முதல்வர் பழனிச்செல்வம், உதவி முதல்வர் ஆறுமுகக்குமார், தலைமை ஆசிரியர் லதா மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

தென்காசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. செங்கோட்டையைச் சேர்ந்த காந்தியவாதி ராம்மோகன் தலைமை வகித்தார். டிரஸ்ட் குழந்தைகள் இல்லத்தின் தலைவர் பூ.திருமாறன் முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் முகாமை தொடங்கிவைத்தார்.

சிறப்பு மருத்துவ முகாம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் மேலகரம், இலஞ்சி, சுரண்டை, ஆலங்குளம், கீழப்பாவூர், திருவேங்கடம், அச்சன்புதூர், சிவகிரி, வாசுதேநல்லூர் பேரூராட்சி பகுதிகளில் 151 இடங்களில் நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற முகாமில் ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் பங்கேற்று, உடல் பரிசோதனை செய்துகொண்டார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையமுன் காமராஜர் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்