சென்னையில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பால் தெருக்கள் மீண்டும் தகரம் கொண்டு அடைப்பு: தமிழகத்தில் புதிதாக 5,595 பேருக்கு பாதிப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் புதிதாக 5,595 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள னர். சென்னையில் பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் தெருக்கள் தகரம் கொண்டு அடைக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 3,417, பெண்கள் 2,178 என மொத்தம் 5,595 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 5,588 பேர் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். அதிகபட்சமாக சென்னையில் 1,278 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 8,885 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில், சென்னையில் 12,013 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 46,294 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் முதியவர் கள் உட்பட 43 பேர், தனியார் மருத்துவ மனைகளில் 24 பேர் என நேற்று மட்டும் 67 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 14 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 9,653 ஆக உயர்ந்துள் ளது. சென்னையில் மட்டும் 3,241 பேர் இறந் துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 1 லட்சத்து 70,075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 188 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 75 லட் சத்து 26,688 பரிசோதனைகள் நடைபெற் றுள்ளன. நேற்று மட்டும் 84,991 பரிசோத னைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு செய் திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அந்த தெருவின் இரு புறமும் கட்டைகள், தகரங்கள் கொண்டு அடைத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதி யாக அறிவித்து முன்பு பேனர் வைக்கப் பட்டது. இதனால், பொதுமக்கள் கடுமை யான மன உளைச்சலுக்கு ஆளாகினர். பின்னர் ஊரடங்கில் தளவுகள் அளிக்கப் பட்டதால், தெருக்களுக்கு பதில், தொடர் புடைய வீட்டின் நுழைவுப்பகுதி மட்டும் தகரம் கொண்டு அடைக்கப்பட்டது. அதன் பிறகு தொற்று குறையத் தொடங்கியதால், வீடுகளை தகரம் கொண்டு அடைக்காமல் அறிவிப்பு பேனர் மட்டும் கட்டப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் தற் போது பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மீண்டும் தெருக்களை தகரம் கொண்டு அடைப்பது நடைமுறைக்கு வந்துள்ளது. மேற்கு மாம்பலம் ருக்மணி தெருவில் 21 பேருக்கு தொற்று ஏற்பட்டதால், தெருவின் இருபுறமும் தகரம் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.

இதனால், அத்தெருவில் வசிக்கும் மக்கள் எங்கும் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விஜயகாந்த் டிஸ்சார்ஜ்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கடந்த மாதம் 22-ம் தேதி கரோனா உறுதி படுத்தப்பட்டு சென்னை மியாட் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதாவுக்கும் தொற்று உறுதியானது. இதையடுத்து அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவமனை நிர் வாக இயக்குநர் மருத்துவர் பிரித்வி மோகன்தாஸ் வெளியிட்ட செய்திக்குறிப் பில், “விஜயகாந்த், பிரேமலதா இருவரும் தொற்று காரணமாக மருத்துவக் கண் காணிப்பில் இருந்தனர். இருவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து, இருவரும் டிஸ் சார்ஜ் செய்யப்பட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்