நெல்லை, தென்காசி, மதுரை, ராமேஸ்வரம், கொல்லத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் சேவை நாளை முதல் இயக்கப்படும் என மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்படி, நெல்லை - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் நெல்லையில் இருந்து அக்., 2ம் தேதி முதல் இரவு 07.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.35 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர் – நெல்லை சிறப்புரயில் அக்., 5-ம் தேதி இரவு 7.50 மணிக்குபுறப்பட்டு மறுநாள் காலை 6 45 மணிக்கு நெல்லை செல்கிறது.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 5 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிபெட்டிகள், மூன்று இரண்டாம் வகுப்பு இருக்கைவசதி பெட்டிகள்இணைக்கப்படும். நெல்லை எக்ஸ்பிரஸ் நின்றுசென்ற நிறுத் தங்களில் நிற்கும்.
» விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க தான் திமுகவுக்கு தெரியும்; அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்
» கரோனாவுக்கு தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பலி: கன்னியாகுமரி காவல்துறையில் முதல் இழப்பு
சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிறப்பு ரயில் அக்., 3ம் தேதி இரவு 8.40 மணிக்குபுறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கத்தில் செங்கோட்டை - சென்னை எழும்பூர்சிறப்பு ரயில் அக்., 4-ம் தேதி மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.00 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.
இந்த ரயிலில், ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 5 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், மூன்று இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படும். பொதிகை எக்ஸ்பிரஸ் நின்று சென்ற நிறுத்தங்களில் நிற்கும்.
சென்னை எழும்பூர் - மதுரை தேஜாஸ் சிறப்பு ரயில் அக்., 2 ஆம் தேதி காலை 6.00 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.20 மணிக்கு மதுரை வந்து சேரும்.
மறுமார்க்கத்தில் மதுரை- சென்னை எழும்பூர் தேஜாஸ் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து அக்., 2 ம் தேதி மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.
இந்த ரயில்கள் வியாழக்கிழமைகளில் இயங்காது. இந்த ரயில்கள் திருச்சி, கொடைக்கானல் ரோடு ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ராமேஸ்வரத்திலிருந்து அக்., 2ம் தேதி இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் அக்., 5-ம் தேதி மாலை 5.45 மணிக்கு கிளம்பி மறுநாள் அதிகாலை 4.25 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது.
இதில், ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்று அடுக்குபடுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படும். மாம்பலம், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகொட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் ரயில் நிலையங்களில் நிற்கும்.
சென்னை -ராமேஸ்வரம் சிறப்பு ரயில் அரியலூர், ஸ்ரீரங்கம் ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். சென்னை எழும்பூர் - கொல்லம் சிறப்பு ரயில் அக்., 3 ம் தேதி முதல் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1.15 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் கொல்லம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்அக் 4 ஆம் தேதி முதல் மாலை 3.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.10 மணிக்கு சென்னைக்கு செல்கிறது.
இதில், ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படும். அனந்தபுரி எக்ஸ்பிரஸ் நின்ற நிறுத்தங்களில் நிற்கும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago