மாயமான மரகதலிங்கம் எங்கே?- மதுரையில் சிலைக் கடத்தல் தடுப்புப் போலீஸ் விசாரணை

By என்.சன்னாசி

மதுரை மாநகராட்சியில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம் மாயமானது குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அண்ணாநகர் வழக்கறிஞர் முத்துக்குமாரிடம் விசாரித்துள்ளனர்.

மதுரை மீனாட்சியம்மன்கோவில் எதிரே மாநகராட்சி வரி வசூல் அலுவலகத்தில் பல நூற்றாண்டுளுக்கு முந்தைய மரகதலிங்கம் இருந்தது. அதற்கு பூசாரி நியமிக்கப்பட்டு பூஜை நடந்தது.

இதற்கிடையில் அக்கட்டிடத்தின் ஸ்திரத்தன்மையைக் காரணம் காட்டி இடித்தபோது அங்கிருந்த மரகதலிங்கம் மதுரை மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதன்பின், அந்த சிலை மாயமானதாக, அப்போதைய மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பிரச்சினை எழுந்தது.

இந்நிலையில் வழக்கறிஞர் முத்துக்குமார், மரகதலிங்கம் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டுவிட்டதாகவும், அது தொடர்பாக விசாரிக்கவேண்டும் எனவும் தல்லாகுளம் போலீஸில் புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில், சிபிஐ விசாரித்து மரகதலிங்கத்தை மீட்டு, மீண்டும் வழிபாட்டிற்கு வைக்க வேண்டுமென வழக்கறிஞர் முத்துக்குமார் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி. கிருபாகரன். மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆஜராக உத்திரவளித்தார். அப்போதைய ஆணையரும் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

இதற்கிடையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சிலைக் கடத்தல் தடுப்பு போலீஸ் ஒரு மரகதலிங்கத்தை மீட்டனர். இது மதுரையில் மாயமான மரகத லிங்கமாக இருக்கலாம் என்ற கோணத் தில் வழக்கறிஞர் முத்துக்குமாரிடம் விசாரித்த நிலையில், நேற்று மீண்டும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தன்னிடம் மரகதலிங்கம் குறித்து விசாரித்ததாக அவர் கூறுகிறார்.

மேலும், அவர் கூறியது: நேற்று காலையிலிருந்து மாலை வரை சிலைக் கடத்தல்தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராம் தலைமையிலான குழு மதுரை மாநகராட்சி ஆவணங்களை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விசாரித்தனர்.

என்னிடமும் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். மாநகராட்சிஅதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தகவலில் குன்னத்தூர் சத்திரத்திலிருந்து மீட்டது ஸ்படிக லிங்கம் எனக் கூறி உள்ளனர்.

வெறும் ஸ்படிகலிங்கத்திற்கு தனி பூசாரி நியமித்து பூஜை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஸ்படிகம் என்றால் தண்ணீர் நிறத்தில் இருக்கும். தல்லாகுளம் போலீஸ் தாக்கல் செய்த அறிக்கையில், பூசாரியிடம் நடத்திய விசாரணையின்படி, பச்சைநிற லிங்கத்திற்கு பூஜை செய்து வந்ததாகவும் அது மரகதலிங்கம் என தனக்கு அப்போது தெரியாது எனவும் பூசாரி கூறியதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மரகதலிங்கம் பச்சை நிறத்தில் தான் இருக்கும். மாநகராட்சி அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் பொய் அறிக்கை தாக்கல் செய்த்துள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் சிலைக் கடத்தல் தடுப்புக்குழு நடத்திய ஆணவங்களின் ஆய்வு அடிப்படையில் தொலைந்தது மரகதலிங்கம் எனத் தெரியவந்துள்ளது. இதை மாநகராட்சி நிர்வாகம் மறுக்கிறது.

ஆனாலும், போராடி உண்மை நிலையை வெளியே கொண்டு வருவேன், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்