ஏஎப்டி மில்லை தொடர்ந்து சுதேசி, பாரதி மில்கள் நாளையுடன் மூடல்; புதுச்சேரி அரசு அறிவிப்பு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியின் அடையாளமாக இருக்கும் மில்களை அரசு தொடர்ந்து மூடி வருகிறது. ஏஎப்டி மில்லை தொடர்ந்து சுதேசி, பாரதி மில்கள் நாளையுடன் மூடப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

புதுவையின் அடையாளமாக ஏஎப்டி, பாரதி, சுதேசி ஆகிய பஞ்சாலைகள் இயங்கி வந்தன. இந்த 3 ஆலைகளிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். புதுவையின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக இந்த ஆலைகள் இருந்தன.

இந்நிலையில், கடந்த 25 ஆண்டு காலமாக இந்த மில்கள் நலிவடைய தொடங்கின. இதனை மீண்டும் சீரமைத்து இயக்க பல்வேறு முயற்சிகளை எடுப்பதாக அரசுகள் தெரிவித்தன. இதற்காக மத்திய அரசிடம் நிதி பெறவும் முயற்சித்தனர். ஆனால், நிதி கிடைக்கவில்லை. தொடர்ந்து, ஆயத்த ஆடை பூங்காவாக மாற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கும் வழி ஏற்படவில்லை. புதிதாக ஆட்களை வேலைக்கு எடுக்காததால் பணியாட்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்தது. பலர் விருப்ப ஓய்வு பெற்று வெளியேறினர்.

3 'ஷிப்ட்'டுகளில் இயங்கிய ஆலைகள் பெயரளவில் இயங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஏஎப்டி, பாரதி, சுதேசி மில்களை இணைத்து புதுவை பஞ்சாலைக்கழகம் என மாற்றமும் செய்தனர். கடந்த சில மாதத்திற்கு முன்பு ஏஎப்டி மில் மூடப்பட்டது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மில்லை தொடர்ந்து இயக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். முதல்வர் நாராயணசாமி, ஆலையை இயக்குவதே தனது கொள்கை என கூறி வருகிறார்.

இந்நிலையில், எஞ்சியிருந்த பாரதி, சுதேசி மில்கள் சொற்ப தொழிலாளர்களுடன் இயங்கி வந்தது. தற்போது இந்த ஆலைகளும் நாளை (செப். 30) முதல் மூடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மேலாண் இயக்குநர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில், "சுதேசி, பாரதி ஜவுளி ஆலையின் கீழ் இயங்கும் ஸ்ரீபாரதி மில் மற்றும் சுதேசி காட்டன் மில் ஆகிய 2 ஆலைகளையும் அரசின் உத்தரவுப்படி தொழில் தகராறுகள் சட்டம் 1947 பிரிவு 25(0)-படி 30.9.2020 ஆம் தேதியுடன் மூடப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்