தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களைத் திறக்கக்கோரிய மனு முடித்து வைப்பு

By கி.மகாராஜன்

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை திறக்கக்கோரிய மனுவை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

இந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் கரோனா ஊரடங்கால் அனைத்து வழிபாட்டு ஸ்தலங்களும் மூடப்பட்டுள்ளது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வழிபாட்டு ஸ்தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் தமிழகத்தில் வழிபாட்டு ஸ்தலங்களை திறக்க அரசு அனுமதி வழங்கவில்லை. எனவே தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு ஸ்தலங்களையும் திறக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு சிறப்பு வழக்கறிஞர் கே.பி.கிருஷ்ணதாஸ் வாதிடுகையில், தமிழகத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டு, பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர் என்றார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் வழிபாட்டு ஸ்தலங்கள் திறக்கப்பட்டுள்ளதால் மனுதாரர் கோரிக்கை மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டியதில்லை. மனு முடித்து வைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்