சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடத்தில் விவசாயியை இழுத்துச் சென்ற முதலை; உடலை மீட்ட தீயணைப்புத்துறையினர்

By க.ரமேஷ்

சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடத்தில் விவசாயியை முதலை கடித்து இழுத்துச் சென்றது. தீயணைப்புத் துறையினர் இன்று உடலை மீட்டனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பழைய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவானந்தம் (56), விவசாயி. நேற்று (செப். 28) இரவு தனது விவசாய பணிகளை முடித்துவிட்டு கிராமத்தின் அருகே உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்துள்ளார். அப்போது, ஆற்றில் இருந்த முதலை அவரை கடித்து இழுத்துச் சென்றது. அவர் "முதலை, முதலை" என்று அலறிய சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த ஊர் பொதுமக்கள் முதலையை கரையில் இருந்து சத்தம் போட்டு விரட்டியுள்ளனர்.

முதலை, அறிவானந்தத்தை ஆற்றின் நடுவே இழுத்துச்சென்று விட்டது. இது குறித்து தகவலறிந்த சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ், சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் தலைமையிலான காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் இரவு 9 மணி முதல் 10 மணி வரை பழைய கொள்ளிடத்தில் விவசாயியின் உடலை தேடினார்கள். உடல் கிடைக்கவில்லை. இதனால் அந்த கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், வேளக்குடி பகுதியில் திடீரென மழை பெய்ததால் உடலை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டதால் ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு திடீரென சிதம்பரம்-சீர்காழி சாலையில் வேளக்குடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டிஎஸ்பி லாமேக், வட்டாட்சியர் ஹரிதாஸ் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். நள்ளிரவு 12 மணி வரை அப்பகுதியில் கடும் மழையில் காவல் துறையினர், வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் முகாமிட்டிருந்தனர்.

நள்ளிரவில் சாலை மறியல்

மீண்டும் இன்று (செப். 29) காலை பழைய கொள்ளிடத்தில் உடலை தேடும் பணியில் வனத்துறையினர், தீயணைப்புதுறையினர், காவல் துறையினர் ஈடுபட்டனர். தீயணைப்புத் துறையினர் பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு அவரது உடலை குண்டல பாடி அருகே பழைய கொள்ளிடத்தில் மீட்டனர். பின்னர் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அண்ணாமலை நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்