குவைத்தில் ஒட்டகம் மேய்த்த கம்பம் இளைஞர் சதாம் உசேன் வரும் திங்கள்கிழமை (செப். 21) நாடு திரும்புகிறார். தன்னை மீட்க உதவியதற்காக ‘தி இந்து’வுக்கு போனில் நன்றி கூறினார்.
தேனி மாவட்டம், கம்பம் தாத்தப்பன்குளம் பகுதியை சேர்ந்த இமாம்ஷா மகன் சதாம்உசேன் குவைத்தில் ஓட்டுநர் பணிக்கு கடந்த ஆக. 2-ம் தேதி சென்றார். ஆனால் அவரை அங்கு ஒட்டகம் மேய்க்கவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்தவர் தனது நண்பர்கள் மூலம் வாட்ஸ்அப் வழியாக தனது கஷ்டத்தை வீடியோ பதிவில் வெளியிட்டார்.
மீட்கும் முயற்சி
‘தி இந்து’வில் இதுகுறித்து செப். 14-ம் தேதி செய்தி வெளி யானது. இதனையடுத்து தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் அவரை மீட்கும் முயற் சியில் ஈடுபட்டனர்.
முற்கட்டமாக நேற்றுமுன் தினம் சதாம் உசேன் பாஸ் போர்ட் அவரிடம் ஒப்படைக் கப்பட்டது. அவர் எப்போது வரு வார் என அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
செல்போன் பேட்டி
இந்நிலையில் நேற்று குவைத் தில் இருந்து சதாம் உசேன் ‘தி இந்து’வுக்கு செல்போன் மூலம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
விசா கிடைத்த இரு மாதங் களுக்குப் பின்னர் தாமதமாக குவைத் சென்றேன். கடந்த 4-ம் தேதியுடன் எனது விசா காலம் முடிந்துவிட்டது. இதற்கிடையில் எனக்கு ஓட்டுநர் பணியும், உணவும் கொடுக்காமல் ஒட்டகம் மேய்க்கச் சொல்லி துன்புறுத்தியதால் நான் ஊருக்கு திரும்ப முடிவு செய்து வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்தேன். எனது கஷ்டங்களை புரிந்துகொண்டு ‘தி இந்து’வில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டு வருவதால் நான் மீட்கப்பட்டு என் அண்ணனிடம் பத்திரமாக உள்ளேன்.
என்னை அழைத்துச் சென்ற காஜாமைதீன் வரும் 27-ம் தேதி டிக்கெட் எடுத்துக் கொடுத்து என்னை இந்தியாவுக்கு அனுப்பு வதாகக் கூறினார். ஆனால் விசா காலம் முடிந்துவிட்ட நிலையில் அக்காமா (அடையாள அட்டை) ஓட்டுநர் உரிமம் இல்லாமல் நான் இங்கு தங்க முடியாது. மீறி தங்கினால் இந்த நாட்டின் விதிமுறைப்படி சிறையில் அடைத்து விடுவார்கள். இதனால் என் அண்ணன் மூலம் டிக்கெட் பெற்று வரும் திங்கள்கிழமை (செப். 21) இந்தியா வந்து விடுவேன். என்னை மீட்க உதவிய ‘தி இந்து’வுக்கும், தமிழக அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago