சென்னையில் மலேசிய விமானம் அவசர தரையிறக்கம்

By பிடிஐ

ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. 230 பயணிகள் இருந்த அந்த விமானம் அவசர கதியில் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது.

நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாமிலிருந்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் மலேசிய விமானம் 230 பயணிகளுடன் புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது தெரிந்தவுடன் அந்த விமானம் முன்னெச்சரிக்கையாக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.

அதில் இருந்த 230 பயணிகளும் இறக்கிவிடப்பட்டு விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து விமான நிலைய தொழில்நுட்ப அதிகாரிகள் குழு விமானத்தின் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு இந்த கோளாறு சரி செய்யப்பட்டதுடன் அதிகாலை 4.30 மணி அளவில் விமானம் மீண்டும் புறப்பட்டு சென்றது.

விமானத்தில் ஏற்பட்ட கோளாறை கண்டறிந்ததால் நேர இருந்த விபத்து தவிர்க்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்