நெல்லையில் சட்டவிரோத கல் குவாரி வழக்கில் நெல்லை ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை தருவை அருகே கண்டித்தாங்குளத்தைச் சேர்ந்த எஸ்.ஞானபால் ஜான்சன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
ஆதிமிதிப்பான்குளம், தருவை, ஈஸ்வரியாள்புரம், ஆலங்குளம் பகுதியில் பலர் சட்டவிரோத கல் குவாரி நடத்தி வருகின்றனர். இந்த குவாரிகளில் கற்களை வெட்டி எடுக்க சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் கற்கள் குடியிருப்பு பகுதிக்குள் வந்து விழுகின்றன. இதனால் வீடுகள் சேதமடைந்து பலர் காயமடைகின்றனர்.
கழிவு கற்களை நீர்நிலைகளிலும், நீர்பாசனக் கால்வாய்களிலும் போட்டு வைத்துள்ளனர். இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் தேங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகளவு கற்களை வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டுச் செல்கின்றனர். இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த குவாரிகளால் கிராமத்தினர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக முதியோர், பெண்கள், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கல் குவாரிகளால் ஆதிமிதிப்பான்குளம், கண்டித்தாங்குளம், ஆலங்குளம் மக்கள் உயிர் பயத்தில் உள்ளனர். எனவே சட்ட கல் குவாரிக்கு தடை விதிக்கவும், அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை குவாரி நடத்துவோரிடம் வசூலிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் நீலமேகம், முகமதுரஸ்வி வாதிட்டனர்.
மனு தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர், கனிவளத்துறை துணை இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago