இந்த ஆண்டு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு: இதுவரை ரூ.1,800 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது

By ப.முரளிதரன்

நடப்பு நிதியாண்டில், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ரூ.1,800 கோடி மட்டுமே கடன் வழங்கப் பட்டுள்ளது. எனவே, வரும் மார்ச் மாதத்துக்குள் முழுக் கடன் தொகையையும் வழங்கி முடிக்கு மாறு அனைத்து வங்கிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

பெண்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பட வைத்து அவர்களை முழுமை யாக ஆற்றல்படுத்த வேண்டும் என்ற நோக்கில், கடந்த 1983-ம் ஆண்டு தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் தொடங்கப் பட்டது.

இதன்கீழ் ஏழைப் பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், சமூகத் தில் ஒதுக்கப்பட்ட பெண்கள் ஆகியோர் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு மகளிர் சுய உதவிக் குழுவில் இணைக்கப் பட்டு வருகிறார்கள்.

மகளிர் திட்டத்தின் மூலம், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல், சுயஉதவிக் குழுக்களுக்கு கட னுதவி, வங்கிகள் மூலமான கடன் இணைப்பு, சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட் களை சந்தைப்படுத்துதல் ஆகி யவை செயல்படுத்தப்பட்டு வரு கின்றன. சுயஉதவிக் குழுக் களுக்கு கடன் வழங்குவதற் காக ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது.

அதன்படி, நடப்பு 2020-21-ம் ஆண்டு சுயஉதவிக் குழுக் களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. ஆனால், வங்கி கள் இதுவரை ரூ.1,800 கோடி வரை மட்டுமே சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கி உள்ளன.

இதுகுறித்து, மாநில வங்கி யாளர்கள் குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியதாவது:

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சொந்தமாக தொழில் புரிவதற் காக கடன் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடப்பு நிதியாண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து உள்ளது. ஆனால், கடந்த ஜூன் மாதம் வரை ரூ.1,800 கோடி வரை மட்டுமே வங்கிகள் கடன் வழங்கி உள்ளன.

வங்கிகளுக்கு அறிவுறுத்தல்

வரும் மார்ச் மாதத்துக்குள் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங் கப்படும் அனைத்துக் கடன்களை யும் வழங்கி முடிக்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இதன்மூலம், வங்கிகள் தங்கள் கடன் வழங்கல் இலக்கை அடைய முடியும். அத்துடன், சுயஉதவிக் குழுக் களும் கடனுதவி பெற்று பயன் அடைய முடியும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்