அப்துல் கலாமின் பேரன் பாஜகவில் இணைந்தார்

By எஸ்.முஹம்மது ராஃபி

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் அண்ணன் பேரன் ஷேக் சலிம் இன்று (திங்கட்கிழமை) பாஜகவில் இணைந்தார்.

அப்துல் கலாமின் அண்ணன் பேரன் ஷேக் சலிம் இன்று புதுடெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவை நேரில் சந்தித்து பாஜகவில் இணைந்தார். அப்போது பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங், கிழக்கு டெல்லியின் பாஜக எம்.பி. மகேஷ் கிரி ஆகியோர் உடன் இருந்தனர்.

இது குறித்து ஷேக் சலிம் நமது செய்தியாளரிடம் கூறியதாவது,

கடந்த ஒரு ஆண்டு காலமாகவே பாஜகவில் சேருவதற்கான அழைப்பு வந்த வண்ணம் இருந்தது. தாத்தா அப்துல் கலாமும் 'இளைஞர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும்' என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். எனவே பாஜகவில் தற்போது இணைந்துள்ளேன். தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்த்தலில் போட்டியிடுவது குறித்து தற்போது கருத்து கூற முடியாது, என்றார் ஷேக் சலிம்.

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய பகுதியாகும். இங்குள்ள உள்ளாட்சி அமைப்புகளிலும் பெருவாரியாக முஸ்லிம்கள் பதவி வகிக்கின்றனர். இதனால் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே முஸ்லிம் வேட்பாளர்களை இத்தொகுதியில் நிறுத்த ஆர்வம் காட்டி வருகின்றன. தற்போது கூட மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவரான ஜவாஹிருல்லா ராமநாதபுரத்தின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் பாஜகவின் சார்பில் அப்துல் கலாமின் பேரன் ஷேக் சலிமை களமிறக்கவோ அல்லது மாநிலங்களவை உறுப்பினராக்கவோ அதிக வாய்ப்புள்ளதாகவும், ராமநாதபுரம் மாவட்ட பாஜக தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கலாமின் அண்ணன் மகன் ஏ.பி.ஜெ.எம். ஹாஜா செய்யது இப்ராகிம் பாஜகவின் தமிழக சிறுபான்மையினர் பிரிவின் மாநிலச் செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்