உலகிலேயே தமிழகத்தில் தான் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான படுக்கைகள் அதிகளவில் சிறப்புடன் இருப்பதாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சுகாதாரப் பணியாளர்களை உற்சாகப்படுத்தவே முதல்வர் களத்திற்கு செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று (செப்.18) அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனையின் டீன் தேரணி ராஜன் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கரோனா சிகிச்சைக்காக 1 லட்சத்து 42 ஆயிரம் படுக்கைகள் தயாராக இருப்பதாக தெரிவித்தார். உயிரிழப்புகளை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். சுகாதாரப் பணியாளர்களை உற்சாகப்படுத்தவே முதல்வர் களத்திற்கு செல்வதாகவும் அவர் கூறினார்.
மேலும், "வளர்ந்த நாடுகளில் கூட படுக்கை வசதிகளுக்குத் திணறினர். தற்காலிக மருத்துவமனைகள் அமைத்தனர். உலகிலேயே தமிழகத்தில் தான் யார் ஒருவருக்கும் படுக்கை வசதியில்லை என கூறாமல், படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது" என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago