மாநிலங்களில் அமையும் மத்திய அரசு பணிகளில் 90 சதவிகித ஒதுக்கீடு உள்ளூர்வாசிகளுக்கு அளிக்க வேண்டும் என திமுக வலியுறுத்தி உள்ளது. மாநிலங்களவையில் இதன் மீது அக்கட்சி எம்.பியான திருச்சி சிவா பேசினார்.
இது குறித்து நேற்று மாநிலங்களவையில் அதன் மூத்த உறுப்பினரான திருச்சி சிவா பேசியதாவது: தமிழகத்தில் 84 லட்சம் பேர் வேலை கேட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர்.
வேலையில்லாதவர்கள் எண்ணிக்கையின் சதவிகிதம் தமிழகத்தில் 7.6 என்றாக உள்ளது. தேசிய சராசரி விகிதத்தில் 6.1 என உள்ள இந்த எண்ணிக்கை கரோனா பரவல் சூழலில் 13.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
மிகவும் உயர்ந்த கல்வித்தகுதி கொண்டவர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். இதனால், குடிமைப்பணிக்கான தேர்வுகளில் அவர்கள் முதலிடம் பெறுகின்றனர்.
சமீபநாட்களில், தூய்மைப்பணிக்காக விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலனவர்கள், எஞ்சினியரிங், எம்.பி.ஏ உள்ளிட்ட பட்டமேற்படிப்பு படித்தவர்கள். இச்சூழலில் தகுந்த முயற்சிகள் எடுத்த பின்பும் அவர்களுக்கு உரிய பணி மத்திய அரசின் அலுவலகங்களில் கிடைப்பதில்லை.
நேற்று முன்தினம் உற்பத்தி வரி மற்றும் ஜிஎஸ்டி அலுவலகத்தின் பல்வேறுப் பணிக்கான 2017 தேர்வின் முடிவுகள் வெளியானது. இதை தேர்வான 197 பேரில் ஒருவர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்.
இதேபோல், சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் 37-க்கு 4 பேரும், வருமானவரி ஆய்வாளரின் 505 பதவிகளில் ஒருசிலர் என தமிழகத்தினர் தேர்வாகினர். எனது திருச்சி பகுதியின் கோல்டன் டிராக் ரயில்வே பணிமணியில் தேர்வான 300 அப்ரண்டீஸ்களில் ஒருவர் கூட தமிழகத்தை சேர்ந்தவர் இல்லை.
இதே பணிமனையின் தொழில்நுட்பப் பணியில் தேர்வான 581 பேரில்12 மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள். இதில் பிஹார், 163, ராஜஸ்தான் 150 என அதிகம். மதுரையின் ரயில்வே அலுவலகத்தில் 651 தேர்வானதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 11 பேர் மட்டுமே.
இதுபோன்ற நிலையில் பெரிய அளவிலான கவலையும், மனஉளைச்சலுக்கும் ஆளான இளைஞர்களை சமாதானப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இதற்காக இப்பிரச்சனையை இங்கு மாநிலங்களவையில் வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
மத்திய அரசின் எஸ்.எஸ்.சி தேர்வில் பணியமர்த்தப்பட்ட 10,659 பேரில் தமிழகத்தினர் நூறுக்கும் குறைவானவர்களாக உள்ளனர். மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் மாநிலவாசிகளுக்கு சமவாய்ப்பு கிடைக்க வேண்டும்.
இவ்வாறன்றி அமைந்திருக்கும் இடங்களில் குறைந்த எண்ணிக்கையை நிரப்ப வேண்டும். மாநிலங்களின் மத்திய அரசு அலுவலகப் பணிகளிலும் உள்ளூர்வாசிகளுக்கு 90 சதவிகித உட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.’ இவ்வாறு அவர் தெரிவித்தார்
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago