மதுரையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.1.38 கோடி அபராதம் வசூல்: விழிப்புணர்வு இல்லாததால் அலட்சியம் தொடர்கிறது

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாவட்டத்தில் முகக்கவசம் போடாததால் பொதுமக்களிடம் இருந்து இதுவரை ரூ.1 கோடியே 38 லட்சத்து 5 ஆயிரத்து 150 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காததால் முகக்கவசமும், கை கழுவுதலுமே நோய்ப் பரவாமல் தடுக்க முக்கிய நம்பிக்கையாக உள்ளது.

அதனால், வீட்டை விட்டு வெளியே வந்தாலே பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.

முகக்கவசம் அணிவதைப் பின்பற்றிய நாடுகளே, இன்று இந்தத் தொற்று நோயிலிருந்து மீண்டு வந்துள்ளன. அதனால், முகக்கவசம் அணியாமல் பொதுவெளியில் நடமாடினால் பொதுமக்களுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் போலீஸார் போன்றோர் அபராதம் விதிக்கின்றனர்.

அந்த வகையில் இதுவரை மதுரை மாவட்டத்தில் முகக்கவசம் போடாததால் பொதுமக்களிடம் இருந்து ரூ.1 கோடியே 38 லட்சத்து 5 ஆயிரத்து 150 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதில், அதிகபட்சமாக மாநகர போலீஸார் ரூ.48 லட்சத்து 96 ஆயிரத்து 300 பொதுமக்களிடம் முகக்கவசம் போடாததால் அபராதம் விதித்து அந்தப் பணத்தை வசூல் செய்துள்ளனர்.

மதுரை மாநகராட்சி அதிகாரிகள் ரூ.27 லட்சத்து 96 ஆயிரத்து 800, மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் ரூ. 4 லட்சத்து 47 ஆயிரத்து 700, பேரூராட்சிகளில் ரூ.13 லட்சத்து 77 ஆயிரத்து 900, கிராம பஞ்சாயத்துகளில் ரூ.2 லட்சத்து 19 ஆயிரமும், பறக்கும் படை அதிகாரிகள் ரூ.21 லட்சத்து 4 ஆயிரத்து 450, புறநகர் போலீஸார் ரூ.20 லட்சத்து 8 ஆயிரம் அபராதமாக முககவசம் போடாத பொதுமக்களிடம் இருந்து வசூலித்துள்ளனர்.

ஆனாலும், விழிப்புணர்வு இல்லாததால் பொதுமக்கள், அதிகளவு பொதுவெளிகளில் முககவசம் போடாமலே சுற்றுகின்றனர். குறிப்பாக மதுரை மாகராட்சியில் ஊரடங்கு தளர்வு அமுல்படுத்தப்பட்டபிறகு பஸ்கள், கார்கள், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், டீக் கடைகள் போன்றவை இயங்குகின்றன.

அதில் பணிபுரிகிறவர்கள், மட்டுமில்லாது அங்கு வரும் வாடிக்கையாளர்களில் 50 சதவீதம் பேர் முகக்கவசம் அணியாமல் வந்து செல்கின்றனர். கரோனா தொற்று நோயால் முகக்கவசம் விற்பனை தற்போது ஒரு தொழில் ஆகிவிட்டது.

சாதாரண துணிகளில் தயாரிக்கப்டும் முகக்கவசங்கள் கூட ரூ.5 முதல் ரூ.10 வரை விற்கப்படுகிறது. மருந்துக் கடைகளில் விற்கும் முகக்கவசம் ரூ.10 முதல் விற்கப்படுகிறது.

தற்போது வேலைவாய்ப்பு இல்லாததால் வருமானம் இல்லாமல் கிராமப்புறங்களில் அடித்தட்டு மக்கள் அன்றாட வாழ்வாதாரத்திற்கே மிகுந்த சிரமப்படுகின்றனர். தினமும் முகக்கவசங்களை கூட விலை கொடுத்து வாங்க முடியவில்லை என்பது அவர்கள் ஆதங்கமாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்