வருங்கால வைப்புநிதி வழக்குகளை காணொலிக் காட்சி மூலம் விசாரிக்கும் நடைமுறை அறிமுகம்

By செய்திப்பிரிவு

வருங்கால வைப்புநிதி தொடர்பான வழக்குகளில் தொடர்புடையோர் நேரில் ஆஜராவதைத் தவிர்க்கும் வகையில், காணொலிக் காட்சிமூலம் விசாரணை மேற் கொள்ளும் நடைமுறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவைமண்டல கூடுதல் வருங்கால வைப்புநிதி ஆணையர் மூ.மதியழ கன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

வருங்கால வைப்புநிதி நிறுவன சந்தாதாரர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான வழக்குகளை விரைவாக விசாரித்து, தீர்ப்பு வழங்கும் நோக்கில் காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்தும் வசதி கடந்த 9-ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக, வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் இணையதளத்தில் (https://eproceedings.epfindia.gov.in) புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வழக்கு ஒத்திவைப்பு தேதிகளின் அறிவிப்புகள், வழக்கின் நிலை, இறுதி உத்தரவுகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள முடியும். காணொலிக் காட்சியில் விசாரணை நடைபெறுவதால் யாரும் நேரில் வர வேண்டிய அவசியமில்லை. காலவிரயமும் தவிர்க்கப்படுகிறது.

வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் இரண்டு மண்டல அலுவலகங்களில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்த வசதி நடைமுறைப்படுத்தப்பட்டது. முன்னோட்டத்தின்போது 90 வழக்குகளின் விசாரணை காணொலிக் காட்சி மூலம் நடத்தப் பட்டுள்ளது.

அதில் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டதால், வழக்குகள் விரைவாக முடிக்கப் பட்டு இறுதி உத்தரவுகள் பிறப்பிக் கப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்