பெரியாரின் 142-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெரியார் ஊட்டிய சமூகநீதி - சமத்துவம் - சாதியொழிப்பு - பெண்ணுரிமை போன்ற தத்துவங்களுக்காக நம்மை ஒப்படைத்துக் கொள்வோம் என, ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (செப், 17), பெரியாரின் 142-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.
அதன்பின்னர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டதாவது:
"மானுட சமுதாயத்திற்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் கற்பித்த அறிவாசான் தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர்–17!
பெரியார் ஊட்டிய சமூகநீதி - சமத்துவம் - சாதியொழிப்பு - பெண்ணுரிமை போன்ற தத்துவங்களுக்காக நம்மை ஒப்படைத்துக் கொள்வோம்!
மானமும் அறிவும் உள்ள சமுதாயம் அமைப்போம்!
தந்தை பெரியார் வாழ்க! சுயமரியாதைச் சுடர் வெல்க!”
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago