மாநிலங்களுக்குள் செல்ல இ-பாஸ் பெறுவதை ரத்து செய்ய வழக்கு: சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

By கி.மகாராஜன்

மாநிலங்களுக்குள் பயணிக்க இ-பாஸ் பெற வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரிய மனு தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனியைச் சேர்ந்த ஹரிஹரசுதன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க மார்ச் முதல் மே வரை கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும் இ-பாஸ் பெற வேண்டியதில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும், வரவும் இ- பாஸ் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு இ-பாஸ் முறையை ரத்து செய்யக் கூறியுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும், வரவும் இ-பாஸ் கேட்பது சட்டவிரோதம். எனவே மாநிலங்களுக்கு இடையே செல்வதற்கு இ-பாஸ் பெற வேண்டும் என்பதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக். 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்