கோவில்பட்டியில் இருந்து கடத்த முயற்சி: 1300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்- 3 பேர் கைது

By எஸ்.கோமதி விநாயகம்

கோவில்பட்டியில் இருந்து 1300 கிலோ ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 3 பேரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

கோவில்பட்டியிலிருந்து வெளியூர்களுக்கு ரேஷன் அரிசி மூடைகள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் தில்லை நாகராஜன், உதவி ஆய்வாளர் வேல்ராஜன் மற்றும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோவில்பட்டி- மந்திதோப்பு ரோட்டில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நேற்று இரவு 11 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த சுமை வேனை நிறுத்தி போலீஸார் சோதனையிட்டனர். இதில் 50 மூடை ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். இந்த மூடைகளில் மொத்தம் 1300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.

இதையடுத்து வேனில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், கோவில்பட்டி, மந்திதோப்பு கணேசன் நகரைச் சேர்ந்த வெயில்காளை (52), இலுப்பையூரணி, வடக்கு தெருவைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் மாரிகிருஷ்ணன் (20), கோவில்பட்டி வள்ளுவர்நகர் 3-வது தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் நாகராஜன் (34) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்கள் 3 பேரும், கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ரேஷன் கடைகளில் ரேஷன் அரிசியை வாங்கி, அதை ரைஸ்மில்லில் கூர் தீட்டி கால்நடை தீவனத்துக்காக வெளியூர்களுக்கு கடத்த திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சுமை வேன் மற்றும் 1300 கிலோ ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்