இளநிலை உதவியாளர் பணிக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு

By த.அசோக் குமார்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வாகி பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர்களில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேருக்கும் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு செய்யப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 644 இளநிலை உதவியாளர்களில் தென்காசி மாவட்டத்துக்கு 17 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தென்காசி ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இணையதள வாயிலாக கலந்தாய்வு நடத்தப்பட்டு, நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யப்பட்ட தென்காசி மாவட்டத்தை இருப்பிட முகவரியாக உடையவர்கள் பட்டியல் வரிசை எண் 330 வரை உள்ளவர்கள் வருகிற 17-ம் தேதியும், வரிசை எண் 331 முதல் 644 வரை உள்ளவர்கள் 18-ம் தேதியும் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும்.

கலந்தாய்வுக்கு வரும்போது அசல் கல்வித் தகுதி சான்றுகள், ஜாதிச் சான்று, மருத்துவத் தகுதிச் சான்று அசல் மற்றும் நகல்களுடன் கலந்துகொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 8940512010 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்