தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு தென்காசி நகராட்சி 9-வது வார்டு நகராட்சி பள்ளியில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் அப்பகுதி குழந்தைகளுக்கு வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கர்பிணி தாய்மார்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. இரும்புச்சத்து திரவம் 3, பேரிச்சம்பழம் 2 பாக்கெட், குடற்புழு நீக்க மாத்திரை 1, புரோட்டடின் பவுடர் 2, நெய் 1 பாட்டில், டவல் 1 ஆகியவை அடங்கிய அம்மா ஊட்டச்சத்து பெட்டகம் 5 கர்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும், இ-சஞ்சிவினி ஒ.பி.டி. மருத்துவ ஆலோசனை திட்டம் பற்றிய விழிப்புணர்வும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வும் பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி வாயிலாக தகவல், கல்வி தொடர்பு பற்றிய நடமாடும் விழிப்புணர்வு வாகன ஊர்தியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் சிவலிங்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயசூர்யா, தென்காசி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஹசினா பேகம், வட்டார மருத்துவ அலுவலர் இப்ராஹிம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நேற்று தொடங்கி வருகிற 19-ம் தேதி வரை முதற்கட்டமாகவும். 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் மாத்திரை வழங்கப்பட உள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களிலும், வீடு வீடாகச் சென்று சுகாதார பணியாளர்கள் மூலமாகவும் 1 முதல் 19 வயது வரை உள்ள 3,60,525 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கப்பட உள்ளது.
குடற்புழு நீக்க மாத்திரை அனைத்து குழந்தைகளுக்கும் கொடுப்பதன் மூலம் ரத்த சோகை குறைபாடு, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, சோர்வு மற்றும் படிப்பில் ஆர்வமின்மை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago